ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நடிகர் தனுஷ் சமீபத்தில் நடித்து கடந்த ஜூலை 22-ம் தேதி வெளியான ஹாலிவுட் படம் 'தி கிரே மேன்'. மார்க் கிரேனி என்பவர் எழுதிய 'தி கிரே மேன்' என்ற நாவலை மையமாக வைத்து இப்படம் உருவானது. இந்த படத்தை அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய அந்தோனி, ஜோ ரூஸோ ஆகியோர் இணைந்து இயக்கியிருந்தார்கள். இதில் ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரயான் காஸ்லிங், கிறிஸ் ஈவென்ஸ் ஆகியோருடன் இணைந்து தனுஷ் நடித்திருந்தார் ..
இப்படத்தில் அவிக் சென் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக தனுஷ் நடித்தார். தி கிரே மேன் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாகவும் தனுஷ் அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மீண்டும் நடிப்பார் எனவும் கூறப்பட்டு வந்தது. அதனை உறுதி செய்யும் வகையில் தி கிரே மேன் 2 வில் நடிக்க இருப்பதாக வீடியோ ஒன்றை பதிவிட்டு அறிவித்துள்ளார் தனுஷ். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.