ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு மூன்றாவது முறையாக இணைந்து நடித்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. இந்தப்படத்தில் கதாநாயகியாக மும்பையை சேர்ந்த சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர் ஏற்கனவே சசியின் இயக்கத்தில் ஹரிஷ் கல்யான் ஜோடியாக நடித்து முடித்துவிட்டு அதன்பின் சிம்புவுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருகட்டமாக தற்போது இந்த படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு தானே டப்பிங் பேசி உள்ளார் சித்தி இத்னானி.
இவர் மும்பையைச் சேர்ந்தவர் என்றாலும் கவுதம் மேனன் கொடுத்த ஊக்கத்தில் இதை சாதித்துள்ளார்.. டப்பிங்கை முடித்ததும் கவுதம் மேனனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, தனது டப்பிங் பற்றி பேசியுள்ள சித்தி இத்னானி, 'இந்தப் படத்தில் பாவையின் டப்பிங்கை முடித்து விட்டேன். என்னை நம்பியதற்காகவும் டப்பிங் பேச அனுமதித்ததற்காகவும் கவுதம் மேனன் சாருக்கு நன்றி. இப்போது கூட நான் கவுதம் மேனன் பட ஹீரோயின் என்பதை நம்ப முடியவில்லை” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.