பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் |

3 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஹாலிவுட் படமான ‛ஜோக்கர்' உலகம் முழுக்க பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக கூறப்பட்டது. ஆனால் இதுபற்றிய அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளிவராமல் இருந்தது.
தற்போது ஜோக்கர் 2ம் பாகம் உருவாகி வருவதாகவும் 2024ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி ரிலீஸாக இருப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் நடித்த ஜாக்குயின் போனிக்ஸ் தான் இதிலும் நடிக்கிறார். லேடி காஹா ஹீரோயினாக நடிக்கிறார்.
முதல் பாகத்தில் நடித்த பெரும்பாலானவர்கள் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள். டோட் பிலிப்ஸ் இயக்குகிறார். ஜோக்கர் இரண்டாம் பாகம் தயாராவதில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் படத்தை பார்க்க இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டுமே என்று கவலையும் அடைந்திருக்கிறார்கள்.