இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
சின்னத்திரை பிரபலங்கள் தங்கள் இணையருடன் கலந்து கொண்டு ஆட்டம் பாட்டம் என கலக்கும் நிகழ்ச்சி 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை'. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரசிகர்களின் பேவரைட் ஷோவான இது, தற்போது 4வது சீசனை எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர் தீபன், பரீனா, மதன், ரேகா கிருஷ்ணப்பா மற்றும் சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா உட்பட 10 சின்னத்திரை பிரபலங்கள் தங்கள் இணையருடன் ஜோடியாக கலந்து கொண்டுள்ளனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்நிகழ்ச்சியில், சமீபத்தில் திருமணமாகி போட்டியில் கலந்து கொண்டுள்ள அஜய் கிருஷ்ணா - ஜெஸ்ஸி ஜோடிக்கு ஏரளாமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீசனில் அவர்கள் டைட்டில் பட்டம் வெல்ல வேண்டும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால், கடந்த வாரம் நடைபெற்ற எலிமினேஷன் ரவுண்டில் தனிபட்ட சில காரணங்களால் அஜய் கிருஷ்ணா - ஜெஸ்ஸி ஜோடி பங்கேற்க முடியவில்லை. இதனையடுத்து இருவரும் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து வெளியேறியுள்ளனர். இதன் காரணமாக ரசிகர்கள் பெரிய ஏமாற்றம் அடைந்துள்ளனர்.