5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
தமிழில் வாட்ச்மேன், கோமாளி, பப்பி போன்ற படங்களில் நடித்தவர் சம்யுக்தா ஹெக்டே. தற்போது கன்னடத்தில் அபிஷேக் பசந்த் என்பவர் இயக்கி வரும் கிரீம் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆக்சன் கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் சண்டைக் காட்சியில் நடித்த போது கீழே விழுந்த சம்யுக்தாவின் முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்யுக்தாவின் காலில் தசை பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அதனால் சில நாள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் இந்த சண்டை காட்சிகள் சம்யுக்தா ஹெக்டே நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு மருத்துவமனையில் காலில் கட்டு போடப்பட்ட நிலையில் அவர் படுத்திருக்கும் புகைப்படம் ஒன்றும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.