ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தமிழிலும் இந்தியிலும் முன்னணி நட்சத்திரங்களை வைத்து படம் இயக்கிவிட்ட இயக்குனர் ஷங்கர் தற்போது முதல்முறையாக தெலுங்கு திரை உலகில் அடி எடுத்து வைத்து, இளம் முன்னணி நடிகரான ராம்சரண் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகிகளாக கியாரா அத்வானி மற்றும் அஞ்சலி ஆகியோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சீரான இடைவெளிகளில் ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் தற்போது ஐதராபாத்தில் உள்ள சரூர் நகர் பகுதியில் இருக்கும் ஒரு பள்ளிக்கூடம் ஒன்றில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அந்த பகுதியின் நகராட்சி அதிகாரியான அகுலா ஸ்ரீவாணி என்பவர் பள்ளிக்கூடத்தில் படப்பிடிப்பை நடத்துவதற்கு தடை விதித்ததுடன் பள்ளிக்கூடம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மாணவர்களின் படிப்பு பாழாகும் விதமாக படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார். அது மட்டுமல்ல இப்படி பள்ளியில் படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டியையும் கடுமையாக விமர்சித்துள்ளார். இதை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாம்.