20 ஆண்டுகளாக தோழிகளாக வலம்வரும் திரிஷா - சார்மி! | 'குபேரா' படத்தின் புதிய அப்டேட்! | அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் |
பிரபல கதாசிரியரும், இயக்குனர் ராஜமவுலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத்(80) ராஜ்யசபாக எம்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கு சினிமாவின் பிரபல கதாசிரியர் கே.வி.விஜயேந்திர பிரசாத். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் உள்ள கொவ்வூர் என்ற ஊரில் பிறந்தவர் இவர். ஜானகி ராமுடு என்ற படத்தின் மூலம் கதாசிரியராக அறிமுகமான இவர் சத்ரபதி, மகதீரா, பாகுபலி 1,2, ஆர்ஆர்ஆர், பஜ்ரங்கி பைஜான், மெர்சல், மணிகர்னிகா, தலைவி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு கதை எழுதி உள்ளார். ஓரிரு படங்களை இயக்கியும் உள்ளார். பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலியின் தந்தையான இவர், மகனின் வெற்றி படங்களுக்கு கதையில் முக்கிய பங்காற்றி உள்ளார்.
இந்நிலையில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை ராஜ்யசபாவிற்கு நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நியமிக்கலாம். அதன் அடிப்படையில் விஜயேந்திர பிரசாத் ராஜ்யசபா எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு திரையுலகினரும், அரசியல் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.