காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா படம் வெளியாகி மாதங்கள் சில கடந்துவிட்டாலும் இன்னும் புஷ்பா ஜுரம் குறையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த படத்தில் அல்லு அர்ஜுன் பேசிய தகிடதாலே என்கிற வசனமும் கையால் தாடையை நீவிவிடும் மேனரிசமும் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இன்னொரு பக்கம் சாமி சாமி பாடலுக்கு ராஷ்மிகா ஆடிய நடனமும் வரவேற்பை பெற்றது..
அல்லு அர்ஜுனின் வசனத்தையும், மேனரிசத்தையும் கிரிக்கெட் வீரர்கள் முதற்கொண்டு இமிடேட் செய்து சோஷியல் மீடியாவில் வீடியோக்கள் வெளியிட்டு வந்தனர் இந்தநிலையில் WWE-வில் இந்திய மல்யுத்த வீரர் சவுரவ் குர்ஜார் என்பவர் மல்யுத்த போட்டியில் தனது எதிரியை அடித்து வீழ்த்திவிட்டு அல்லு அர்ஜுன் போல் தனது கையால் தாடையை நீவியபடி தகிடதாலே என்கிற வசனத்தை ஜுகேச நகி சாலா என ஹிந்தியில் பேசியுள்ளார்.. இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.