நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி கதாநாயகியாக வலம் வந்தவர் ரம்பா. இவர் 2010ல் கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். சினிமாவில் நடிக்க வந்த காலத்தில் சென்னையில் குடி இருந்த ரம்பா, திருமணத்துக்கு பிறகு கனடா நாட்டில் செட்டில் ஆகிவிட்டார். 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சென்னை வந்திருக்கிறார் ரம்பா. அப்படி வந்தவர், நடிகர் அருண் விஜய்யின் தங்கையான நடிகை ஸ்ரீதேவியுடன் இணைந்து யானை படத்தை சென்னையில் உள்ள ஊர் தியேட்டரில் பார்த்து ரசித்துள்ளார்.
அப்போது தான் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். மேலும், தியேட்டரை விட்டு வெளியே வந்த நடிகை ரம்பா மீடியாக்களிடம், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தைகளுடன் இந்தியாவுக்கு சுற்றுலா வந்ததாக தெரிவித்தார். மேலும், யானை படத்தில் இடம்பெற்றுள்ள ஆக்சன் மற்றும் காமெடி காட்சிகளை குழந்தைகள் ரசித்து பார்க்கிறார்கள். ஹரி சிறப்பாக இயக்கி உள்ள இந்த படத்தில் அருண் விஜய் சூப்பராக நடித்துள்ளார் என்றும் தெரிவித்தார் ரம்பா.