தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் | டாக்குமெண்டரியாக தயாராகும் ரகுவரன் வாழ்க்கை | தமிழுக்கு வரும் 'கொண்டல்' பிரதிபா |
நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் 6 ஆண்டுகளுக்கு மேல் காதலித்து வந்தவர்கள் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி சென்னையில் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்கள் திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஹிந்தி நடிகர் ஷாருக்கான் உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். அதையடுத்து வெளிநாட்டிற்கு ஹனிமூன் சென்றபோது தாங்கள் எடுத்துக் கொண்ட ரொமான்ஸ் புகைப்படங்களை தொடர்ந்து சோசியல் மீடியாவில் வெளியிட்டு வந்தார் விக்னேஷ் சிவன்.
இந்த நிலையில் தற்போது தான் இயக்கி வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இடம்பெற்ற நான் பிழை என்ற பாடலில் இடம்பெற்ற நினைச்சா தோணும் இடமே என்ற கேப்ஷனுடன் ஒரு ரொமாண்டிக் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் நேற்று பதிவிட்டு இருந்த விக்னேஷ் சிவன், இன்று நயன்தாரா தன்னை இருக்க கட்டி அணைத்தபடி எடுத்துக்கொண்ட ஒரு ரொமாண்டிக் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இதற்கு, நான் பிறந்த தினமே என்ற அதே பாடலில் வரும் கேப்ஷனை பதிவு செய்திருக்கிறார். இதற்கு மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் லைக்ஸ் கொடுத்திருக்கிறார்கள்.