லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
நடிகர் விக்ரம் ஏகப்பட்ட கெட்டப்புகளில் நடித்து முடித்துள்ள படம் 'கோப்ரா'. 'இமைக்கா நொடிகள்' படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டியும், வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ரஷ்யாவில் படமாக்கப்பட்டுள்ளது. அதோடு விக்ரம் பல வேடங்களில் நடித்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது. ஆகஸ்ட் 11 -ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் திரையரங்கு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக., மீண்டும் ஆட்சிக்கு வந்த பின் தொடர்ச்சியாக முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்றி வெளியிட்டு வருகிறது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ். அந்தவகையில் கோப்ரா படமும் உதயநிதி வசமாகி உள்ளது.