சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை |
1997ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான படம் 'டைட்டானிக்'. இப்படம் 1912ஆம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை அடிப்படையாகக் கொண்டு உருவான படம். உலகில் அதிகம் வசூலித் படத்தில் 3வது இடத்தில் இருக்கிறது. (முதலிடம் அவென்ஜர் எண்ட்கேம், இரண்டாமிடம் அவதார்).
இப்படம் 11 ஆஸ்கர் விருதுகளைக் குவித்தது. இப்படத்தில் நடித்த லியார்னாடோ டிகாப்ரியோ மற்றும் கேட் வின்ஸ்லெட் இருவரும் பின்னர் வெவ்வேறு படங்களுக்காக ஆஸ்கர் விருது பெற்றனர். இப்போதும் உலகம் முழுக்கு ஏதாவது ஒரு தியேட்டரில் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது.
படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிறது. இதை கொண்டாடும் வகையில் பிலிமில் உருவான இந்த படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றி, ஒலி, ஒளியை மெருகூட்டி வெளியிட இருக்கிறார்கள். அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி காதலர்கள் தினத்தன்று காதலை கொண்டாடும் இந்த படம் மீண்டும் வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.