நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
தெலுங்கு தயாரிப்பாளர் தயாரிக்க, தெலுங்கு இயக்குனர் இயக்குவதாலோ என்னவோ விஜய் தற்போது நடித்து வரும் 66வது படமான 'வாரிசு' படத்தின் டைட்டில் அறிவிப்பு மற்றும் முதல் பார்வை, இரண்டாவது பார்வை போஸ்டர்கள் தமிழில் வெளியிடப்படவில்லை.
நேற்று வெளியான முதல் பார்வை மற்றும் இன்று காலை வெளியான இரண்டாவது பார்வை போஸ்டர்கள் இரண்டுமே ஆங்கிலத்தில் மட்டுமே வெளியாகி உள்ளது. ஆங்கிலத்தில் உள்ள பெயரை தமிழில் போட எவ்வளவு நேரமாகப் போகிறது. மேலும், ஆங்கிலத்தில் இப்படத்தின் பெயரைக் குறிப்பிடும் போது 'வரிசு' என பொருள்படும் விதத்தில் 'Varisu' எனக் குறிப்பிடுவதாகவும் ரசிகர்கள் குறைபட்டுள்ளனர்.
இதனிடையே இன்று(ஜூன் 22) மாலை 5.02 மணிக்கு படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியானது. அதிலாவது தமிழ் இடம் பெறுமா என்று பார்த்தால் அதிலும் ஆங்கிலத்தில் தான் வெளியானது. பைக் ஒன்றில் ஸ்டைலாக போஸ் கொடுத்தபடி அமர்ந்துள்ளார் விஜய்.