ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். தற்போது வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக அவரின் 61வது படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. பொதுவாக அஜித் தொடர்பான போட்டோக்கள் வெளியானால் அது உடனே சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆகி விடும். அதேப்போல் அவரது குடும்பத்தினர் போட்டோக்கள் வெளியானாலும் டிரெண்ட் ஆகும்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வில் அஜித்தின் மனைவி ஷாலினி, அவரது குழந்தைகள் பங்கேற்ற சில வீடியோக்கள் வெளியாகின. தற்போது ஷாலினி, அவரின் தங்கை ஷாமிலி மற்றும் அஜித்தின் மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோர் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா திருமண வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றனர். அம்மா ஷாலினி அளவுக்கு வளர்ந்த பெண்ணாக அனோஷ்கா உள்ளார். அங்கு எடுக்கப்பட்ட போட்டோ இப்போது வைரலாகி வருகிறது.