ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் | 2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் | ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புகையிலை விளம்பரத்திற்கு ரூ.40 கோடி: தைரியமாக மறுத்த சுனில் ஷெட்டி | ‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் | 2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் |

காதல், அதுவும் மதம் மாறிய காதல் என்பதில் சினிமா பிரபலங்களும் விதிவிலக்கல்ல. தமிழ் சினிமா எத்தனையோ காதல் கதைகளைப் பார்த்திருக்கிறது. சினிமாவில் வருவதை விடவும் நிஜ வாழ்வில் சிலரது காதல் பரபரப்பை ஏற்படுத்தியருக்கிறது.
80களின் கடைசியில் அறிமுகமான குஷ்பு. அதன் பிறகு 90களில் தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகையாக இருந்தார். சிவாஜி கணேசனின் மகன் பிரபுவும், குஷ்புவும் காதலிப்பதாக அப்போது பெரும் பரபரப்பு எழுந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்றெல்லாம் கூட செய்திகள் வெளிவந்தன. ஆனால், இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டார் குஷ்பு. முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த குஷ்பு திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றது. தொடர்ந்து தன்னை இந்துப் பெண்ணாகவே மாற்றிக் கொண்டு வாழ்ந்து வருகிறார் குஷ்பு.
1990களின் இறுதியில் அறிமுகமானவர் ஜோதிகா. 2000 வருடங்களில் தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகையாக இருந்தார். பல இளம் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக பல வெற்றிப் படங்களில் நடித்தார். அவருடன் நடித்த சூர்யாவைக் காதலிப்பதாக பலத்த கிசுகிசுக்கள் வந்தன. அவர்களது திருமணத்திற்கு சூர்யாவின் அப்பா சிவகுமார் எதிர்ப்பு தெரிவித்ததாக செய்திகள் வந்தன. ஆனால், குடும்பத்தினருடன் முழு சம்மதத்துடன் சூர்யா, ஜோதிகா திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றது. ஜோதிகாவின் அம்மா முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர், அப்பா பஞ்சாபி. முஸ்லிமாகவே வளர்ந்த ஜோதிகா திருமணத்திற்குப் பிறகு கணவர் சூர்யா குடும்பத்தினரின் இந்து முறைகளையே பின்பற்றி வருகிறார்.
2005ம் ஆண்டு தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நயன்தாரா. கேரள மாநிலம் திருவல்லாவைச் சேர்ந்தவர். அவரது பெற்றோர் கிறிஸ்துவர். சில வருடங்களுக்கு முன்பு நடிகர் பிரபுதேவாவைக் காதலித்த போது அவரைத் திருமணம் செய்து கொள்வதற்காக இந்து மதத்திற்கு மாறினார். ஆனால், அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் பிரிந்தனர். இருந்தாலும் தொடர்ந்து இந்து கோயில்களுக்குச் சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தார் நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவனைக் காதலிக்க ஆரம்பித்தபின் அவரது இந்து மத பக்தி இன்னும் அதிகமானது. இருவரும் சேர்ந்து பல கோயில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர். இன்று(ஜூன் 9) நயன்தாரா இந்து முறைப்படியே விக்னேஷ் சிவனைத் திருமணம் செய்து கொண்டார்.




