அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
2022ம் ஆண்டு ஆரம்பமானது முதல், ஒவ்வொரு வாரத்திலும் நேரடி தமிழ்ப் படங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இந்த வருடத்தில் இதுவரையில் குறிப்பிடும் அளவில் நேரடி தமிழ்ப் படங்களான “எப்ஐஆர், வலிமை, எதற்கும் துணிந்தவன், செல்பி, பீஸ்ட், காத்து வாக்குல ரெண்டு காதல், டான், நெஞ்சுக்கு நீதி, விக்ரம்” ஆகிய படங்கள் சொல்லும் அளவிலான வெற்றியைப் பெற்றுள்ளன. அந்த நேரடி தமிழ்ப் படங்களோடு, டப்பிங் படங்களான 'ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' ஆகிய படங்களும் நல்ல வசூலைப் பெற்றுள்ளன.
தொடர்ந்து இடைவிடாமல் படங்கள் வெளிவந்து கொண்டிருந்த சூழ்நிலையில் இந்த வாரம் நேரடி தமிழ்ப் படங்களுக்கு சற்றே இடைவெளி வரும் எனத் தெரிகிறது. இந்த வார வெள்ளிக்கிழமை ஜுன் 10ம் தேதியன்று குறிப்பிடத்தக்க தமிழ்ப் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. மாறாக டப்பிங் படங்களான 'அடடே, சுந்தரா' மற்றும் '777 சார்லி' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.
தெலுங்கில் தயாராகி தமிழில் டப்பிங் செய்யப்பட்டுள்ள படம் 'அடடே, சுந்தரா'. நானி, நஸ்ரியா, நதியா, ரோகிணி, அழகம் பெருமாள் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கன்னடத்தில் தயாராகி தமிழில் டப்பிங் ஆகி வரும் படம் 'ரரர சார்லி'. ரக்ஷித், சங்கீதா சிருங்கேரி, சார்லி என்ற நாய் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இந்த வாரம் இந்த இரண்டு டப்பிங் படங்களுக்கு இடையேதான் போட்டி நிலவப் போகிறது.