பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் | பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா | 50 பேர் ஆசீர்வாதத்தால் கிடைத்த வாய்ப்பு: நமிதா நெகிழ்ச்சி | ஜெய் படம் மூலம் தமிழுக்கு வரும் கன்னட நடிகை | ஆண்ட்ரியா படத்தின் காட்சிகளை மாற்ற நீதிமன்றம் உத்தரவு | ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி |
தமிழில் இந்த ஆண்டின் முக்கியமான வெற்றிப் படங்களில் ஒன்றான விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தில் கதாநாயகியகா நடித்தவர் பூஜா ஹெக்டே. அவர் தற்போது தெலுங்கு, ஹிந்தியிலும் பிஸியாக நடித்து வருகிறார். தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என தற்போது சம்பள விஷயத்தில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். நடிகை நயன்தாரா 4 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். அவரை மிஞ்சும் அளவிற்கு பூஜா தற்போது தன்னுடைய சம்பளத்தை 5 கோடியாக உயர்த்தியுள்ளாராம்.
பூஜாவின் சம்பளம் மட்டும் 4 கோடி ரூபாய், அவருடைய உதவியாளர்களுக்கு மட்டுமான சம்பளம் 1 கோடி ரூபாயாம். தெலுங்கில் 'ஜனகனமண' படத்தில் விஜய் தேவரகொன்டா ஜோடியாக நடிக்கத்தான் அவருக்கு அவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாம். ஹிந்தியில் 'சர்க்கஸ், கபி ஈத் கபி தீபாவளி' படங்களிலும் நடித்து வருகிறார் பூஜா.
'கபி ஈத் கபி தீபாவளி' படம் தமிழில் அஜித் நடித்து வெளிவந்த 'வீரம்' படத்தின் ரீமேக். தமன்னா நடித்த கதாபாத்திரத்தில் பூஜா நடித்து வருகிறார்.