இரண்டு வாரமாக தாக்குப் பிடிக்கும் 'கூலி' | ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ் | சிம்பு படத்துக்கு தயாரிப்பாளர் மாற்றமா? | லடாக்கில் சிக்கித் தவிக்கும் மாதவன் | 'கூலி'க்கு 'யுஏ' சான்று கேட்ட வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு | பிளாஷ்பேக் : சிவாஜி, பத்மினியை சேர்த்து வைத்த பணம் | என் குழந்தைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா : ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | 50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் |
2019ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான படம் கைதி. 100 கோடி வசூலித்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர் மத்தியில் தொடர்ந்து நிலவிக் கொண்டிருக்கிறது. மேலும் தற்போது கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி திரைக்கு வந்திருக்கும் விக்ரம் படத்தில் கைதி படத்திற்கு தொடர்புள்ள ஒரு சில காட்சிகள் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன. இதன் காரணமாகவே நேற்று முன்தினம் தனது சமூக வலைத்தளத்தில் கைதி படத்தை பார்த்துவிட்டு விக்ரம் படத்தை பாருங்கள் என்று ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருந்தார் லோகேஷ் கனகராஜ். இதற்கு கைதி படத்தை தயாரித்த எஸ்.ஆர்.பிரபு, ‛கைதி-2 படத்தை ஆரம்பிக்கலாமா?' என்று பதிவிட்டுள்ளார். இப்படி அவர் பதிவிட்டதை அடுத்து கைதி-2 படத்தை உடனே இயக்குமாறு கார்த்தி ரசிகர்கள் லோகேஷ் கனகராஜ்க்கு வேண்டுகோள் வைக்க தொடங்கிவிட்டார்கள்.