டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் |
சாமி 2 படத்திற்கு பிறகு ஹரி இயக்கி இருக்கும் படம் யானை. இதில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, அம்மு அபிராமி, ராதிகா சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார், கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் இயக்குனர் ஹரி பேசியதாவது: எனது 'தமிழ்' படத்தில் ஆரம்பித்த பயணம், மெல்ல மெல்ல ஆக்ஷன் படங்களுக்கு தாவி... அதில் வெற்றி கிடைத்ததால் அதிலேய பயணித்து தெலுங்கு படங்கள் மாதிரியான படங்கள் வரை சென்று விட்டேன். எனக்கு சில ஆண்டுகள் இடைவெளி கிடைத்தது. அதில் நான் நிறைய சிந்தித்தேன். நிறைய படங்கள் பார்த்தேன். இப்போதுள்ள டிரண்டை புரிந்து கொண்டேன். அதனால் என்னை முழுமையாக மாற்றிக் கொண்டு உருவாக்கி உள்ள படம் யானை.
இதில் எனது பாணியிலான படு வேகம் இருக்காது, ஓங்கி அடிச்சா ஒண்டரை டன் வெயிட் இருக்காது. ஒரு எமோல்சலான, பீல் குட் படமாக இருக்கும். இரண்டு இடத்திலாவது ஆடியன்ஸ் கண்ணீர் சிந்தினால் இந்த படம் வெற்றி. அப்படி யோசித்து இந்த படத்தை எடுத்துள்ளேன். யானை எப்போதும் தன் குடும்பத்துடன் இருக்கும், மிகுந்த பொறுமையான விலங்கு. ஆனால் அதற்கு கோபம் வந்தால் என்ன ஆகும் அதுதான் இந்த படத்தின் கதை. என்றார்.