மம்முட்டியை பற்றி தவறாக எதுவும் சொல்லவில்லை : பெண் தயாரிப்பாளர் விளக்கம் | ஸ்வேதா மேனனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரகுமான் | நடிகர் விஷ்ணுவர்தனின் நினைவிடம் இடிப்பு : சுதீப், ரிஷப் ஷெட்டி வருத்தம் | 65 ஆயிரம் கேட்ட பஹத் பாசிலுக்கு ஒரு லட்சம் கொடுத்தேன் : தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் | 'கேம் சேஞ்ஜர், ஹரிஹர வீர மல்லு' தோல்விகள் தரும் பாடம் என்ன? | தமிழ் சினிமாவின் 2025 வறட்சியை மாற்றுமா 'கூலி' | கதை பேசப்படணும், அதனல நடித்தேன் : காயல் பட அனுபவம் குறித்து அனுமோல் | இதுவரை நடித்திராத கேரக்டரில் சுனில் : கண் பார்வையற்றவராக நடிக்கும் ஹீரோ | முதல் நாள் சாதனை வசூலை நோக்கி 'கூலி' | அயோத்தி, பார்க்கிங், மகாராஜா, லப்பர் பந்து இயக்குனர்களின் அடுத்த படம்? |
அஜித் நடிப்பில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்களை தொடர்ச்சியாக இயக்கிய சிவா அதையடுத்து சூர்யா நடிக்கும் ஒரு படத்தை இயக்க இருந்தார். ஆனால் திடீரென்று ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் சூர்யா படத்தை தள்ளி வைத்துவிட்டு ரஜினியை வைத்து அண்ணாத்த என்ற படத்தை இயக்கினார். இந்த நிலையில் அடுத்தபடியாக சூர்யாவை இயக்குவதற்கு சிவா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது பாலா இயக்கும் தனது 41வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த படத்தை அடுத்து வெற்றிமாறன், ஞானவேல் இயக்கும் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ள சூர்யா, சிவா இயக்கும் படத்திலும் நடிக்கப் போகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை மாதத்திற்கு பிறகு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. சூர்யாவை வைத்து இயக்கும் படத்தை பீரியட் கலந்த ஆக்சன் கதையில் இயக்குகிறாராம் சிவா. இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.