அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். தமிழ், ஹிந்தி தாண்டி ஹாலிவுட்டிலும் கால்பதித்துள்ளார். அவரது நடிப்பில் ‛நானே வருவேன், திருச்சிற்றம்பலம்' ஆகிய படங்கள் முடிந்துவிட்டன. விரைவில் இந்த படங்கள் வெளியாக உள்ள நிலையில் தற்போது ‛வாத்தி' படத்தில் நடித்து வருகிறார். நடிகராக மட்டுமல்லாது பன்முக திறமை கொண்ட தனுஷ், வுண்டர்பார் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தையும் நிர்வகித்து வருகிறார். இந்நிறுவன தயாரிப்பில் ‛‛3, எதிர்நீச்சல், காக்கா முட்டை, மாரி, விசாரணை, பா.பாண்டி, காலா'' உள்ளிட்ட பல படங்கள் தயாராகின.
இந்நிலையில் வுண்டர்பார் நிறுவனத்தின் யு-டியூப் சேனல் மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளது. மாரி 2 படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் யூடியூபில் பல கோடி சாதனைகளை படைத்தது. அந்த பாடலையும் சேர்த்து தனுஷின் தயாரிப்பு நிறுவன யு-டியூப் சேனலையும் ஹேக் செய்துள்ளனர். இது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. யுடியூப் சேனலை மீட்கும் நடவடிக்கையில் தனுஷின் தயாரிப்பு நிறுவனம் இறங்கி உள்ளது. விரைவில் சரியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.