நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் |
மார்வெல் ஸ்டுடியோஸின் அடுத்த வெளியீடான 'டாக்டர் ஸ்ட்ரேன்ஜ் - இன் த மல்டிவெர்ஸ் ஆப் மேட்னஸ்' படம் இந்த வாரம் மே 6ம் தேதி இந்தியாவில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. வெளியாக இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் அதற்குள்ளாகவே முன்பதிவு மூலமாக சுமார் 20 கோடி வரை இந்தியாவில் வசூலித்துள்ளது.
'ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம்' படத்தின் முன்பதிவு தொகையை இப்படம் கடந்துவிட்டதாம். படம் வெளிவருவதற்குள் மேலும் சில கோடிகள் முனபதிவு மூலம் கிடைக்கலாம் என்கிறார்கள். அடுத்த சில நாட்களுக்குள் கூடுதலாக 10 கோடி வரை முன்பதிவு மூலம் கிடைத்துவிடுமாம். கடந்த வருடம் வெளியான 'ஸ்பைர்மேன்' படத்திற்குப் பிறகு இந்த 'டாக்டர் ஸ்ட்ரேன்ஜ்' படத்தை மார்வெல் பெரிய அளவில் வெளியிடுகிறது.
2016ல் வெளிவந்த 'டாக்டர் ஸ்ட்ரேன்ஜ்' படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் வெளிவருகிறது. சாம் ரைமி இயக்கியுள்ள இந்தப் படத்தில் டாக்டர் ஸ்ட்ரேன்ஜ் ஆக பெனடிக்ட் கம்பர்பாட்ச் நடிக்கிறார். இப்படம் அமெரிக்காவில் மட்டும் முதல் வாரத்தில் 200 மில்லியன் யுஎஸ் டாலர் வரை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்ச்சைக்குரிய ஒரு 'எல்ஜிபிடி' கதாபாத்திரம் படத்தில் இருப்பதால் இப்படம் சவூதி அரேபியா, கத்தார், குவைத், எகிப்து ஆகிய நாடுகளில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவிலும் இப்படம் வெளியாவதில் அரசியல் ரீதியாக சிக்கல் ஏற்பட்டுள்ளது.