போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

காதல் படத்தின் மூலம் பிரபலமானவர் சுகுமார். அதன்பின் பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்தார். தற்போது ‛தொடாதே' என்ற படத்தில் ஹீரோவாக களமிறங்கி உள்ளார். இவருக்கு ஜோடியாக பிரீத்தி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஜெயக்குமார் நடித்துள்ளார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி, அலெக்ஸ் இயக்குகிறார். குடியைத் தொடாதே, பெண்ணின் விருப்பமில்லாமல் தொடாதே, போதைப் பொருட்களை தொடாதே எனும் கருத்தை மையமாக வைத்து திரைக்கததை அமைத்திருக்கிறார் இயக்குனர் அலெக்ஸ். நடுத்தரக் குடும்பத்திற்கும் கீழான மக்களின் வருமானம் மதுபானக் கடைகளில் சீரழிகிறது. அதை மக்கள் புரிந்து, குறைந்த பட்சமாவது திருந்த வேண்டும் என்கிற நோக்கில், ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் தயாராகிறது.
கொடைக்கானல், மதுரை மற்றும் சுற்று வட்டாரங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இசை வெளியீடும், அதை தொடர்ந்து திரையரங்குகளில் படம் வெளியாகிறது.