'ஜனநாயகன், பராசக்தி' டிக்கெட் புக்கிங் நிலவரம் எப்படி | சின்ன படங்களுக்கு எட்டாக்கனியாகிறதா அனிருத் இசை? | இளவரசியாக நடிக்கும் ரக் ஷனா | பொங்கல் போட்டி : தியேட்டர்கள் கிடைக்கத் தடுமாறும் தெலுங்குப் படங்கள் | 'ஜனநாயகன்' டிரைலரை பின்னுக்குத் தள்ளிய 'பராசக்தி' டிரைலர், எழுந்த சர்ச்சை | 'ஜனநாயகன்' டிரைலர் புதிய சாதனையை ஒரே நாளில் முறியடித்த 'பராசக்தி' | கிடப்பில் போடப்பட்ட பீமன் கதையை கையில் எடுக்கும் ரிஷப் ஷெட்டி | 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ரிச்சர்ட் ரிஷி - நட்டி | பைக் பயணமாக தனுஷ்கோடிக்கு விசிட் அடித்த மஞ்சு வாரியர் | 20 நிமிடங்கள் வரை ட்ரிம் செய்யப்பட்ட ராஜா சாப் |

நடிகர் தனுஷ் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்துவருகிறார் . இதற்கு பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் வாத்தி படத்திலும் நடிக்க இருக்கிறார் . மேலும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கும் படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளார். இதற்கான படப்பிடிப்பு வருகின்ற ஜூலை மாதத்தில் துவங்க உள்ளது .
இந்நிலையில் இந்த படத்தில் தனுஷுக்கு வில்லனாக பிரபல நடிகர் விநாயகன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் சமீபத்தில் நடிகர் விநாயகனை சந்தித்துள்ளார். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் . நடிகர் விநாயகனும் , தனுஷும் மரியான் படத்தில் இணைந்து நடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .