நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் | அங்கிளான என்னை அண்ணனாக மாற்றிவிட்டார் பஹத் பாசில் ; இயக்குனர் சத்யன் அந்திக்காடு பெருமிதம் | ரீல்ஸ் பைத்தியமாக நடிக்கும் வர்ஷினி வெங்கட் |
விஜய்மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படம் மழை பிடிக்காத மனிதன். கமல் போரா, லலிதா தனஞ்செயன், பிரதீப் பங்கஜ் போரா விக்ரம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். நடிகர் சரத்குமார் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
படத்தின் கதை குறித்து விஜய் மில்டன் கூறியதாவது: பல்வேறு தொழில்களின் அடிப்படையில் மக்கள் மழையை ஒரு வரம் அல்லது சாபமாக உணர்கிறார்கள் ஆனால், இங்கே கதாநாயகன் விதிவிலக்கானவன், மழையை விரும்பாததற்கு அவனுக்கு தகுந்த காரணம் உள்ளது. ஆனால் அதற்கு பின்னணி கதை எதுவும் இல்லை, மழையுடன் தொடர்புடைய நினைவுகள் சில அவனில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, ஆனால் இறுதியில் இவையெல்லாவற்றிலும் ஒரு மாற்றம் ஏற்படுகிறது.
இந்தப் படத்தில் மேகா ஆகாஷின் கதாபாத்திரம் வழக்கமான ஒன்றாக இருக்காது, ஆனால் யதார்த்தமான பெண்ணின் சாயல்களை கொண்டிருக்கும். சரத்குமார் மிக முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்தின் பெரும்பகுதியை டையு - டாமன் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. என்றார்.
படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது, இந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது, மற்றும் பிற போஸ்ட் புரடக்சன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.