லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்துள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் அடுத்த வாரம் மார்ச் 24ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் படம் அமெரிக்காவில் 1150 இடங்களில் வெளியாக உள்ளதாக படத்தை அங்கு வெளியிடும் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இடங்கள் என்பது அமெரிக்காவில் படம் வெளியாகும் பகுதிகளை குறிப்பிடுகிறது.
“மிகப் பெரிய ஆக்ஷன் டிராமா படத்தின் மிகப் பெரிய வெளியீடு. உறுதி செய்யப்பட்ட 1150 இடங்களில், அமெரிக்காவில் இதுவரை கேள்விப்படாத அளவுக்கு அதிகமான காட்சிகளில்” என்று தெரிவித்துள்ளார்கள்.
ஒரு நாள் முன்னதாக மார்ச் 24ம் தேதியே அங்கு பிரிமீயர் காட்சிகளும் நடைபெற உள்ளது. அதற்கான முன்பதிவுகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஜனவரி மாதம் இப்படம் வெளியாக திட்டமிடப்பட்டிருந்த போது அமெரிக்காவில் சுமார் 2000 தியேட்டர்களில் வெளியிட உறுதி செய்திருந்தார்கள். இப்போது எத்தனை தியேட்டர்களில் வெளியாகப் போகிறது என்பது பற்றிய தகவல் விரைவில் வெளியாகலாம்.