பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு |
சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக உள்ளவர் சமந்தா. அவ்வப்போது தான் அணியும் புதுவகையான உடைகளையும் ஆபரணங்களையும் உடனுக்குடன் ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் கவனத்துக்கு கொண்டுவந்து விடுவார். அந்தவகையில் தற்போது பேஸ்டல் பச்சை நிறத்தில் தங்க நிற சரிகை வேயப்பட்ட சேலை ஒன்றை அணிந்து ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார் சமந்தா.
இந்த சேலையின் சிறப்பம்சமே இதில் இடம்பெற்றுள்ள டிசைன்கள் அனைத்தும் கையால் பெயிண்டிங் செய்யப்பட்டவை என்பதுதான்.. அவர் அணிந்துள்ள ஜாக்கெட்டும் கூட இதே விதமாக உருவாக்கப்பட்டது தான். இந்த சேலையின் விலை என்ன தெரியுமா ? வெறும் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 999 ரூபாய் மட்டும் தான். கையால் இந்த சித்திரங்களை வரைந்து இந்த ஆடையை அர்ச்சனா ஜஜூ என்பவர் வடிவமைத்துள்ளார். இந்த உடையில் சமந்தாவை பார்த்துவிட்டு 'அழகாக இருக்கிறது என பாராட்டியுள்ளார் நடிகை ராசி கண்ணா.