ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் நடித்துள்ள படம் மாறன். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகயிருப்பதாக தெரிவித்துள்ள படக்குழு, டிரைலரை யார் வெளியிடுகிறார்கள் என்பதை கெஸ் பண்ணுங்கள் என்று ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் மாறன் பட டிரைலரை பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிம்பு, அந்த நிகழ்ச்சியின்போதே வெளியிடப் போவதாக இன்னொரு செய்தியும் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.