அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா |
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்துவரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு ராஜமுந்திரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கதையின் தேவைக்கு ஏற்ப இயக்குனர் ஷங்கர் திறந்தவெளியில் சில முக்கிய காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறார். இதன் காரணமாக படப்பிடிப்பை காண பொதுமக்கள் அதிகளவில் வந்து சென்றதால் அந்த காட்சிகளை படம் பிடித்து வருபவர்கள் அதை ஆன்லைனில் பகிர்ந்து வருகிறார்கள். இது படக்குழுவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
இதன் காரணமாக தயாரிப்பாளர் தில் ராஜுவின் குழுவினர் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் படக்காட்சி மற்றும் வீடியோக்களை டெலிட் செய்து வருகிறார்கள். அதோடு ஆர். சி - 15 படத்தின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட வேண்டாம் என்றும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள். இந்த படத்தில் ராம்சரண் சிவில் சர்வீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ராஜமுந்திரியில் நடைபெற்று வருகிறது.