அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
பத்து வருடங்களுக்கு முன் முகமூடி படம் மூலம் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே, ஒருகட்டத்தில் ராசியில்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்டு ஓரம் கட்டப்பட்டார்.. ஆனால் இன்றோ தனது தொடர் வெற்றிகள் மூலம் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், ஹீரோக்கள் என பலரும் தங்களது முதல் சாய்ஸாக விரும்பும் அளவுக்கு முன்னணி நடிகையாக வலம் வருகிறார் பூஜா ஹெக்டே. அந்தவகையில் தமிழில் விஜய்யுடன் நடித்துள்ள பீஸ்ட் மற்றும் தெலுங்கில் பிரபாஸுடன் நடித்துள்ள ராதே ஷ்யாம் என பூஜா ஹெக்டே நடித்துள்ள இரண்டு படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக இருகின்றன.
படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் ஜாலியாக வெளிநாட்டுக்கு டூர் கிளம்பிவிடும் பூஜா ஹெக்டே, அங்கிருந்து தனது புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துகொள்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். இந்தமுறை மாலத்தீவுக்கு தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார் பூஜா ஹெக்டே.. ‛‛கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு பின் இப்படி குடும்பத்துடன் சுற்றுலா வந்துள்ளதாகவும் அந்தவிதமாக நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த கடன் ஒன்றை செலுத்தி விட்டதாகவும்'' தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் பூஜா ஹெக்டே.