மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மற்றும் பலர் நடித்துள்ள 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் டீசர் நேற்று யு டியுபில் வெளியானது.
நேற்று மாலையில் வெளியான டீசருக்கு இன்று காலைக்குள் 70 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளது. இது உண்மையான விவரம் என டீசரை வெளியிட்டுள்ள இசை வெளியீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த படங்களின் டீசர்களில் இதுவரையிலும் '96' படத்தின் டீசர்தான் 63 லட்சம் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தது.அந்த சாதனையை 'காத்து வாக்குல ரெண்டு காதல்' டீசர் முறியடித்துள்ளது.
சுவாரசியமான படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இந்த டீசரைப் பார்த்ததும் ஏற்பட்டுள்ளது. அற்புதமான ஒளிப்பதிவு, விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோரின் அனுபவம் வாய்ந்த நடிப்பு, அனிருத்தின் இனிமையான பின்னணி இசை இந்தப் படத்தின் டீசருக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கக் காரணமாக அமைந்துள்ளது.
இயக்குனர் விக்னேஷ் சிவன் 'நானும் ரௌடிதான்' படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு வெற்றியைப் பெறுவார் என டீசரே சொல்லிவிட்டது என்று ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.