ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சூர்யா தயாரித்து, நடித்த படம் சூரரைப்போற்று. சுதா கொங்கரா இயக்கி இருந்தார். சூர்யாவுடன் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி நடித்திருந்தார்கள், ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருந்தார். குறைந்த கட்டணத்தில் பயணிகள் விமானத்தை இயக்கிய பைலட் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படம்.
இந்த படம் ஓடிடியில் வெளிவந்தாலும் பெரும் வரவேற்பை பெற்றது. என்றாலும் படம் விசுவல் ட்ரீட்மெண்டுடன் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டதால் தியேட்டரில் வெளியாக வில்லையே என்ற ஏக்கம் ரசிகர்களுக்கு இருந்தது.
இந்த நிலையில் முதல் முறையாக மதுரையில் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. மதுரை சம்மட்டிபுரத்திலுள்ள மிட்லண்ட் சினிமாஸில் நேற்று காலை முதல் திரையிடப்பட்டுள்ளது.
இந்த தியேட்டரில் வெளியாகும் தகவலை சில நாட்களுக்கு முன் அறிந்த சூர்யா ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொது மக்களும் ஆன்லைனிலும் நேரிலும் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்கள். நேற்று சூர்யா ரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் தியேட்டரில் சூரரைப்போற்று படத்தை கண்டு களித்தனர்.