அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தமிழில் 'கழுகு, சவாலே சமாளி, சிவப்பு, கழுகு 2' ஆகிய படங்களை இயக்கிய சத்ய சிவா இயக்கத்தில் ராணா டகுபட்டி, ரெஜினா கசான்ட்ரா, சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடித்த படம் '1945'. தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டதாக சொல்லப்பட்ட இந்தப் படம் கடந்த மாதம் ஜனவரி 7ம் தேதி தெலுங்கில் வெளியானது. தமிழிலும் இப்படம் வெளியானதாகச் சொல்கிறார்கள்.
இப்படத்தின் தயாரிப்பாளருக்கும் படத்தின் நாயகன் ராணா டகுபட்டிக்கும் சம்பள விவகாரம் மற்றும் சில விவகாரங்களில் சண்டை மூண்டது. அது குறித்து ராணா கூட சமூகவலைதளத்தில் படத்தைப் பற்றியும், தயாரிப்பாளர் பற்றியும் கமெண்ட் செய்திருந்தார்.
ஆறு வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட படத்தை எப்படியோ ஒரு வழியாக கடந்த மாதம் வெளியிட்டார்கள். தெலுங்குப் படத்தைப் பார்த்த விமர்சகர்கள் படத்திற்கு கடுமையான விமர்சனங்களை எழுதியிருந்தார்கள். படத்திற்கு ராணாவும் டப்பிங் பேசவில்லை. அவருக்குப் பதிலாக யாரையோ டப்பிங் பேச வைத்துள்ளார்களாம்.
இந்நிலையில் இப்படத்தை இன்னும் சில தினங்களில் டிவியில் ஒளிபரப்ப உள்ளார்களாம். தியேட்டர்களிலேயே படத்தைப் பார்க்க யாரும் வராத போது டிவியில் யார் படத்தைப் பார்க்கப் போகிறார்கள் என்று டோலிவுட்டினர் கிண்டலடிக்கிறார்கள்.