நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விஜய் தற்போது வம்சி டைரக்ஷனில் நடிப்பதன் மூலம் முதன்முறையாக தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார். இந்த படத்தின் கதாநாயகி யார் என இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதேசமயம் இந்த படம் விஜய்யின் முந்தைய படங்களிலிருந்து மாறுபட்டு, குடும்பம், பாசம், காதல், ஆக்ஷன் என எல்லாம் கலந்து உருவாக இருக்கிறது. குறிப்பாக காதலுக்கும் இந்த படம் முக்கியத்துவம் தந்து உருவாக இருக்கிறது.
அதனால் இந்தப்படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பை வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று அறிவிக்க இருக்கிறார்கள் என தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஒருவர் கதாநாயகியாக நடிப்பார் என சொல்லப்பட்டு வந்தாலும் இப்போதைய லிஸ்ட்டில் ராஷ்மிகா, கியாரா அத்வானி, ராஷி கண்ணா ஆகியோரின் பெயர்கள் முன்னணியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.