நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விக்ரம் பிரபு நடித்துள்ள ‛டாணாக்காரன்' படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இதையடுத்து ‛டைகர்' என்ற புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார். கார்த்திக் என்பவர் இயக்க, இயக்குனர் முத்தையா திரைக்கதை, வசனம் எழுதுகிறார். நாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்க, முக்கிய வேடத்தில் பி.வாசுவின் மகன் ஷக்தி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று(பிப்., 1) துவங்கியது. சாம்.சிஎஸ் இசையமைக்கிறார்.
இயக்குனர் கார்த்தி படம் குறித்து கூறுகையில், ‛‛டைகர் படம் ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரவைக்கும், பரபர த்ரில்லராக இருக்கும். ஒரு திரைக்கதை எழுத்தாளராக இந்த திரைப்படத்தில் இயக்குனர் முத்தையா பங்களிப்பது உண்மையில் உணர்வுப்பூர்வமாக எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. இது நிச்சயமாக பார்வையாளர்களை ஈர்க்கும், பரபர திரில்லராக, ஒரு நல்ல திரையரங்கு அனுபவத்தை தரும் படமாக இருக்கும்'' என்றார்.