ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் தங்களது பிரிவைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இவர்களது பிரிவும் திரையுலகத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ரஜினியைப் போன்றே தெலுங்கில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சிரஞ்சீவியின் குடும்பத்திலும் ஒரு பிரிவு ஏற்பட்டுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா, அவரது கணவர் கல்யாண் தேவ்வை விட்டு பிரிந்துள்ளதாகச் சொல்கிறார்கள். இருவருக்கும் 2016ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2018ம் ஆண்டில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இது ஸ்ரீஜாவின் இரண்டாவது திருமணம்.
அதற்கு முன்பாக தன்னுடன் கல்லூரியில் படித்த சிரிஷ் பரத்வாஜ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஸ்ரீஜா. பெற்றோர் எதிர்ப்பை மீறி 2007ல் சிரிஷைத் திருமணம் செய்துகொண்டார். 2009ல் இவர்களுக்கு ஒரு பெண் குழநதை பிறந்தது. 2011ம் ஆண்டில் தன்னைக் கணவர் சிரிஷ் கொடுமைப்படுத்துவதாகக் கூறி புகார் அளித்து விவாகரத்தும் பெற்றார். அதன் பின் தன் மகளையும், பேத்தியையும் தன் வீட்டிற்கு அழைத்து வந்தார் சிரஞ்சீவி.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தனது இரண்டாவது கணவர் கல்யாண் தேவ் பெயரை தனது சமூக வலைத்தள கணக்கிலிருந்து நீக்கியுள்ளார் ஸ்ரீஜா. மேலும், கடந்த வாரம் கல்யாண் தேவ் நடித்து வெளிவந்த 'சூப்பர் மச்சி' படம் பற்றியும் சிரஞ்சீவி குடும்பத்தினர் எந்தவிதமான வாழ்த்துகளையும் தெரிவிக்கவில்லை. அதனால், இருவரும் பிரிந்துவிட்டதாக தெலுங்கு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கல்யாண் தேவ், ஸ்ரீஜா இருவருமே சிறு வயதிலிருந்தே நண்பர்கள். பெரிய பிசினஸ்மேன் குடும்பத்தைச் சேர்ந்தவர் கல்யாண். சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.