சரோஜாதேவி மறைவு: முதல்வர், திரைப்பிரபலங்கள் இரங்கல் | சிவாஜிகணேசன் - சரோஜா தேவி இணைந்த நடித்த படங்கள் | எம்ஜிஆர் - சரோஜா தேவி இணைந்து நடித்த 26 படங்கள் | சூப்பர் குட் பிலிம்ஸ் 99வது தயாரிப்பில் விஷால் | 'தாமரை நெஞ்சம்' ஒரு படம் போதுமே: பாலசந்தர் அளித்த பதில் | தமிழில் தனது கடைசி படத்தில் நடித்த சரோஜா தேவி | ‛வெள்ளி விழா' படங்களில் முத்திரை பதித்த சரோஜா தேவி : வரிசை கட்டிய விருதுகள் | தனது உயிர் சென்னையில் பிரிய வேண்டும் என்று பேசியிருந்த சரோஜா தேவி | புதிய போட்டி வந்தாலும், சம்பளத்தை உயர்த்திய அனிருத் | தங்கள் தனிப்பட்ட சண்டையை மேடையில் பேசிய விஜய் சேதுபதி, பாண்டிராஜ் |
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன், எஸ்ஜே சூர்யா, கல்யாணி மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்த படம் 'மாநாடு'. வசூல் ரீதியாக வெற்றிப் படமாகவும், விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்ற படமாகவும் அமைந்தது. இந்தப் படத்தை ஒரே நாளில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். தெலுங்கில் 'தி லூப்' என்று பெயரும் வைத்து போஸ்டர்களையும் வெளியிட்டார்கள். ஆனால், சில பல காரணங்களால் தெலுங்கில் அன்றைய தினம் படம் வெளியாகவில்லை.
இதனிடையே, 'மாநாடு' படம் கடந்த மாதம் டிசம்பர் 24ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது. தமிழில் மட்டும் தான் ஓடிடியில் வெளியானது என்று பார்த்தால் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளையும் பின்னர் சேர்த்திருக்கிறார்கள். இப்படி நான்கு மொழிகளில் படம் வெளியாகியிருப்பது பரபரப்பாக பேசப்படவே இல்லை. இப்போது தென்னிந்திய மொழி ரசிகர்கள் அனைவரும் ஓடிடி தளத்தில் அவரவர் மொழிகளில் படத்தை ரசிக்கலாம். நான்கு மொழிகளிலும் 'மாநாடு' என்றே படத்தின் தலைப்பு இருக்கிறது.
அப்படியென்றால் தெலுங்கில் 'தி லூப்' என்ற பெயரில் படத்தை வெளியிடுவதாகச் சொன்னது நின்று போனதாகத்தான் அர்த்தம். மேலும், படத்தின் ரீமேக்கையும் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபு வாங்கியுள்ளதாக அறிவித்திருந்தார். தெலுங்கில் ஓடிடியில் வெளிவந்து விட்ட பிறகு வேறு ஒரு நடிகரை வைத்து அதே படத்தை எப்படி தெலுங்கில் நேரடியாகத் தயாரித்து வெளியிட முடியும். அப்படியே தயாரித்து வெளியிட்டாலும் ஓடிடியில் படம் பார்த்தவர்கள் மீண்டும் படம் பார்க்க வருவார்களா என்ற கேள்வியும் எழுகிறது.
'மாநாடு' படம் பற்றிய தகவல்கள், படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ஏதோ ஒரு குழப்பத்துடனேயே இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.