படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் |
பிக்பாஸ் ப்ரீஸ் டாஸ்க் நிகழ்ச்சியில், பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த நிரூப்பின் அப்பா குழுவில் உள்ள அனைவருக்கும் அட்வைஸ் செய்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கடந்த வாரம் அபிநய் எலிமினேட் செய்யப்பட்டார். இதனையடுத்து இந்த வாரத்தில் புது குழுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில், போட்டியாளர்களின் உறவினர்கள், நண்பர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து அவர்களை சந்திப்பார்கள்.
முந்தைய எபிசோடுகளில் அக்ஷராவின் அண்ணன், தாயார், சிபியின் மனைவி ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர். இந்நிலையில் தற்போது நிரூப்பின் அப்பா இன்றைய எபிசோடில் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகிறார். அவர் நிரூப்பிடம் உன்னால எனக்கு பி.பி. ஏறி போச்சுடா என சொல்லிவிட்டு மற்ற ஹவுஸ்மேட்களுடன் ஜாலியாக பேசி அட்வைஸ் செய்யும் காட்சிகள் ப்ரோமோவில் இடம் பெற்றுள்ளது. இது இன்றைய எபிசோடு மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.