'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோ மூலம் புகழ்பெற்றவர் நடிகர் அஷ்வின்.. சமீபகாலமாக தனி வீடியோ ஆல்பங்களிலும் நடித்து தனது ரசிகர் வட்டத்தை அதிகமாக்கி கொண்டார். சொல்லப்போனால் குக் வித் கோமாளி சிவாங்கி மூலமாக இன்னும் பிரபலமானார் என்றே சொல்லலாம். இந்தநிலையில் என்ன சொல்ல போகிறாய் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள இவர் அந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சற்று அதிகப்பிரசங்கித்தனமாக பேசியதன் மூலம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இந்த விழாவில் பேசும்போது, “எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. என்னிடம் கத்தை சொல்லும்போது எனக்கு அது பிடிக்காவிட்டால் தூங்கி விடுவேன்.. அதுபோல நாற்பது முறை தூங்கியுள்ளேன். நாற்பத்தி ஒன்னாவது கதையான இதுதான் என்னை ஈர்த்தது என கூறினார். அவரது இந்த பேச்சு உதவி இயக்குனர்கள் மற்றும் சில சீனியர் இயக்குனர்களிடம் கூட கோபத்தை வரவழைத்தது. பலரும் அவரது இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு இந்த விஷயத்தை பெரிதுபடுத்த தேவையில்லை, அப்படியே விட்டுவிடுங்கள் என கூறியுள்ளார். அவர் கூறுகையில், “சினிமாவில் நாம் பார்க்கும் கதைகளை விட அதிக சுவாரசியங்கள் கதை சொல்லும் நிகழ்வுகளில் உண்டு. பலர் வாழ்வை புரட்டிப்போடும் தருணம் என்பதால் அது சற்றே அந்தரங்கமான விசயமும் கூட. அனுபவக் குறைபாட்டால் நிகழ்ந்த ஓர் சிறுதவறை பெருந்தன்மையுடன் நாம் கடந்து செல்வோமாக... அன்பு உடலுக்கு ஆயுள் அதிகம்” என கூறியுள்ளார்.