லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த மகாகாந்தி என்பவர், சென்னையில் உள்ள சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் நடிகர் விஜய்சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கடந்த நவம்பர் 2-ந்தேதி அன்று இரவு நடிகர் விஜய்சேதுபதியை பெங்களூரு விமான நிலையத்தில் எதிர்பாராத விதமாக சந்தித்தேன். திரைத்துறையில் அவரது சாதனைகளை சொல்லி பாராட்டினேன். ஆனால் அந்த வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய்சேதுபதி பொதுவெளியில் என்னை இழிவாக பேசினார். எனது சாதியை தவறாக பேசினார்.
விமான நிலையத்தில் இருந்து வெளியேறியபோது அவரது மேலாளர் ஜான்சன் என்னை தாக்கினார். அப்போது எனது காதில் அறைந்தார். இதனால் எனது செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அடுத்தநாள், விஜய்சேதுபதியை நான் தாக்கியது போன்று அவர் தரப்பில் அவதூறு செய்தி பரப்பினார்கள்.
எனவே சினிமாத்துறையில் இருக்கும் ஒரு நடிகரை பாராட்ட சென்ற தன்னை தாக்கியதோடு அவதூறு பரப்பிய குற்றத்திற்காக விஜய்சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் மீதும் கிரிமினல் அவதூறு வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை இந்த வாரமே நடைபெறும் என்று தெரியவந்துள்ளது.