கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடிக்கும் படத்தில் பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ஆலியா பட் நடிக்கிறார். மூன்று மணி நேரப் படத்தில் ஆலியா மொத்தமாக 15 நிமிடங்கள் மட்டுமே இடம் பெறுகிறார் என டோலிவுட்டில் ஏற்கெனவே தகவல் வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பில் ஆலியா 10 நாட்கள் மட்டுமே கலந்து கொண்டார். அவருடைய கதாபாத்திரம் நீட்டிக்கப்பட்ட சிறப்புத் தோற்ற கதாபாத்திரமாகவே இருக்கும் என்கிறார்கள்.
இந்த 10 நாள் படப்பிடிப்புக்கும், 15 நிமிடங்கள் படத்தில் இடம் பெறுவதற்கம் ஆலியா பட் 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறார் என்று தகவல். பாலிவுட்டில் ஒரு படத்திற்காக அவர் வாங்கும் சம்பளம் 10 கோடியாம். இந்தப் படம் முக்கியமான பிரம்மாண்டமான படம், பல கோடி செலவு செய்து எடுக்கிறார்கள் என்பதால் 5 கோடி வரை கேட்டாராம்.
ஹிந்தியில் படத்தை வெளியிட அந்த நட்சத்திரங்களும் இடம் பெற வேண்டும் என்பதால் படக்குழுவும் அவர் கேட்ட சம்பளத்தைக் கொடுத்தார்களாம். ஆலியாவுக்கே அவ்வளவு சம்பளம் என்றால், படத்தில் நடித்துள்ள மற்றொரு பாலிவுட்டி நட்சத்திரமான அஜய் தேவனுக்கு எவ்வளவு சம்பளம் என்பது விரைவில் தெரிய வரும்.