ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி படங்கள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். தனது நண்பர்களுடன் காரில் பயணம் செய்த போது மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ள யாஷிகா குணமாகி வருகிறார். தேறி வரும் யாஷிகா அடிக்கடி தன்னுடைய உடல் நிலை குறித்து தொடர்ந்து தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் விபத்திற்கு பின் முதன் முறையாக பின் எழுந்து நடந்த வீடியோ ஒன்றை பதிவிட்டு 95 நாட்களுக்கு முன் குழந்தை போல முதல் அடி எடுத்து வைக்கிறேன் என்று கூறி இருந்தார்.
உடல் நிலை குணமான நிலையில் யாஷிகா சென்னையில் ஒரு கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட படத்தை வெளியிட்டுள்ளார். மேலும், 4 மாதங்கள் கழித்து வெளியில் வந்துள்ளதாக யாஷிகா ஆனந்த் சில புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். கையில் ஸ்டிக் உதவியுடன் தாங்கி தாங்கி அவர் நடந்து வரும் வீடியோக்களும் வைரல் ஆகி வருகின்றன.