ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு | ரத்தத்தால் அடா சர்மாவின் ஓவியம் வரைந்த ரசிகர் |
தமிழில் தனது மார்க்கெட் மந்தமாக இருப்பதால் தெலுங்கில் நடிப்பதற்கு தீவிரம் காட்டி வந்தார் அமலாபால். அதே நேரத்தில் நாகார்ஜுனாவின் தி கோஸ்ட் படத்திலிருந்து காஜல் அகர்வால் வெளியேறியதால் அந்த படத்தில் கமிட்டானார். ஆனால் தற்போது அந்தப் படத்திலிருந்து அமலாபால் வெளியேற்றப்பட்டு விட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. அதற்கு காரணம், தற்போது தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கும் தமன்னா, பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்கும் ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் அந்த இரண்டு நடிகர்களின் வயதை காரணம் காட்டி அதிகப்படியான சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்து வருகிறார்கள். அதன் காரணமாக அமலாபாலும் நாகார்ஜுனாவின் வயதை காரணம் காட்டி கூடுதலான சம்பளம் கேட்டாராம். ஆனால் படக்குழு அவர் கேட்ட சம்பளத்தை தர முடியாது என கூறிவிட்டதாகவும், அதனால் அவர் படத்திலிருந்து வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.