உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு | அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெற்றி பெற வாழ்த்திய ரஜினி | ரசிகர்களுடன் குட் பேட் அக்லி படம் பார்த்து ரசித்த ஷாலினி அஜித் | ஹவுஸ் மேட்ஸ் படத்தை வெளியிடும் சிவகார்த்திகேயன் | சின்னத்திரை டூ வெள்ளித்திரை... தமிழ் பேசும் நடிகைகளுக்கும் வாய்ப்பு : மாறுது சினிமா டிரெண்ட்! | சூர்யா 45 படத்தில் இணைந்த இளம் நடிகை | தனுஷ் 56வது படத்தை இயக்கும் மாரி செல்வராஜ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு! |
நடிகர் அருண் விஜய் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன. இவற்றில் பார்டர், அக்னிச்சிறகுகள், சினம், பாக்ஸர் படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. தற்போது தனது மைத்துனரும், இயக்குனருமான ஹரி இயக்கத்தில் யானை படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிந்தது. இந்நிலையில் நேற்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடினார் அருண் விஜய். பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் 40 பேர் உடன் இணைந்து தானும் சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்தார்.
அருண் விஜய் கூறுகையில், ‛‛ரசிகர்கள் மேலும் ஒரு அரிய செயலை முன்னெடுத்துள்ளனர். ரத்த தானம் செய்ததோடு அல்லாமல், அவசர தேவையாக எப்போது இரத்தம் தேவைப்பட்டாலும் ரசிகர் மன்றம் மூலம், தேவைப்படுவோர்க்கு இரத்த தானம் அளிக்க முடிவு செய்துள்ளனர். ரசிர்களின் இந்த செயலுக்கும், அன்புக்கும் நன்றி'' என்றார்.