அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து அவர் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளார். தமன் இசையமைப்பாளராக பணியாற்ற உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது இப்படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரியில் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் கதை என்ன என்பது குறித்து முக்கிய தகவல் கசிந்துள்ளது. அதன்படி தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடித்து வரும் விஜய், அடுத்து குடும்ப சென்டிமெண்ட் படத்தில் நடிக்கவுள்ளார். கதைப்படி விஜய் எல்லோரிடமும் அதீத அன்பு வைத்து விடுவாராம். இதனால் எழுகின்ற சிக்கல்கள் தான் கதை என்கிறார்கள். இதுவரை அதிகம் பேசாமல் அமைதியான கேரக்டர்களிலேயே நடித்து வந்த விஜய் இந்த படத்தில் கலகலவென பேசும் கேரக்டரில் நடிக்கிறாராம். விஜய் ஆரம்பகால படங்களில் கலகலப்பான கேரக்டர்களில் தான் நடித்து வந்தார்.