கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார் கமல். இந்த படத்தில் அவருடன் விஜய்சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து கமல் தனது சொந்த தயாரிப்பில் எடிட்டர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார்.
விஸ்வரூபம் படத்தின் எடிட்டரான மகேஷ் நாராயணன் மலையாளத்தில் டேக் ஆப், சீ யூ சூன் உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். தற்போது தமிழில் அவர் இயக்கவுள்ள புதிய படத்திற்கு கமல் தான் கதையை உருவாக்கி வருகிறாராம். இந்த படத்தில் விக்ரம் விஜய்சேதுபதி இருவரையும் நடிக்க வைப்பதில் தீவிரம் காட்டி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம் கமல்.
இந்த படத்தில் கமல் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றாலும் விக்ரம், விஜய்சேதுபதி கதாபாத்திரங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கதை உருவாகி வருகிறதாம். தற்போது தன்னுடன் விக்ரம் படத்தில் இணைந்து விஜய்சேதுபதி நடித்து வருவதாலும், ஏற்கனவே தனது தயாரிப்பில் கடாரம் கொண்டான் படத்தில் விக்ரம் நடித்திருந்தார் என்பதாலும் இவர்கள் இருவரையும் கமல் எளிதாக கூட்டணி சேர்த்துவிடுவார் என்று சொல்லப்படுகிறது.