சங்கராந்திகி வஸ்துனம் - ஒரே மொழியில் வெளியாகி 300 கோடி வசூல் | புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 3 வருடம் கழித்து வெளியிடப்பட்ட பாடல் | நடிகர் முகேஷ் மீது சிறப்பு புலனாய்வு குழு வழக்கு | சினிமாவில் 13 ஆண்டுகளை நிறைவு செய்த சிவகார்த்திகேயன் | போட்டியே இல்லை, இரண்டு வருட இடைவெளி, வசூலை அள்ளுமா 'விடாமுயற்சி' ? | புதிய படத்தை அறிவித்த மம்முட்டி | ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தமன் | 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படம் இயக்கும் ‛கும்பலாங்கி நைட்ஸ்' இயக்குனர் | சினிமா இயக்குனரைக் காதலிக்கிறாரா சமந்தா? | என் அரசியல் பார்வையை பாராட்டிய கமல்! - ஜி.வி. பிரகாஷ் |
மேயாத மான் மூலம் அறிமுகமான ப்ரியா பவானி சங்கர் கைவசம் சுமார் 10-க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. இதில் குருதியாட்டம், ஹாஸ்டல், ருத்ரன், இந்தியன் 2 , 10 தல என புதிய படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த மாதம் ஓடிடியில் வெளியான படம் ஓ மணப்பெண்ணே. பிரியா பவானி சங்கருக்கு ஜோடியாக ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தார். கார்த்தி சுந்தர் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருந்த இந்த படம் தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த பெல்லி சூப்புலு படத்தின் ரீமேக்.
இந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மீண்டும் இதே கூட்டணி இணைய இருக்கிறது. முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகும் இந்த படத்தில் மீண்டும் ஹரிஷ் கல்யாணுடன் பிரியா பவானி சங்கர் ஜோடி சேர்கிறார்.