அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
நேர்கொண்ட பார்வை படத்தையடுத்து வினோத் இயக்கத்தில் வலிமை படத்திலும் நடித்திருக்கிறார் அஜித். இந்த இரண்டு படங்களையும் போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தின் டீசர், முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு சமீபத்தில் தியேட்டர்களில் வெளியான அண்ணாத்த, டாக்டர் போன்ற படங்கள் பெரிய அளவில் வசூலித்து இருப்பதால் வலிமை படத்தையும் அதிக தியேட்டர்களில் வெளியிடுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள்.
சமீபகாலமாக பெரிய நடிகர்களின் படங்களை பல மொழிகளில் வெளியிடுவது டிரெண்ட் ஆகி வருகிறது. அந்தவகையில் வலிமை படத்தை ஹிந்தியில் வெளியிட வேண்டுமென்று தயாரிப்பாளர் போனி கபூரிடம் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். கூடவே, வலிமை படத்தின் ஹிந்தி டிரைலரையும் வெளியிடுங்கள் என்று பதிவிட்டு, டிரெண்ட் செய்து வருகிறார்கள். இதனால் வலிமை படம் தெலுங்கு, ஹிந்தியிலும் வெளியாகலாம் என தெரிகிறது.
அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரோஷி நடித்துள்ள நிலையில் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாநடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.