ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
மோகன்லால் நடித்து விரைவில் திரைக்கு வரவுள்ள மரைக்கார் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் அஜித் விசிட் அடித்த வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி வைரலானது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்த நிகழ்வு இது. அந்த நிகழ்வில் மரைக்கார் படத்தில் திவான் கதாபாத்திரத்தில் நடித்து வந்த வில்லன் நடிகர் பாபுராஜும் அஜித்திடம் பேசியுள்ளார். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பின் மீண்டும் அஜித்தை அப்போதுதான் நேரில் சந்தித்த பாபுராஜ், அஜித்துடனான தனது பழைய இனிய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
“15 வருடங்களுக்கு முன் ஜனா என்கிற படத்தில் அஜித் சாருக்கு வில்லனாக நடித்திருந்தேன். படத்தில் சிறிய வில்லன் வேடம் தான் என்றாலும், அவர் ஏதோ என்னுடன் நீண்ட நாட்கள் பழகியவரை போல அன்புடனும் மரியாதையுடனும் நடத்தினார். கேரவன் என்பதை நான் பார்த்ததோ கேட்டறிந்ததோ கூட இல்லாத அந்த சமயத்தில், ஒவ்வொரு காட்சி முடிந்ததும் அவர் தனது கேரவனுக்குள் என்னை அழைத்து சென்று ஜாலியாக பேசுவார். அவருடைய உணவை என்னுடன் பகிர்ந்துகொண்டு சாப்பிட வைப்பார்.
அதன்பின் இத்தனை வருடங்களுக்கு பிறகு அவர் மரைக்கார் படத்தின் செட்டிற்கு எதிர்பாராத விசிட் அடித்தபோது அவரை பார்த்து ஆச்சர்யப்பட்டு போனேன்.. அவர் என்னை பார்த்ததுமே எனக்கும் அவருக்குமான பழைய நினைவுகள் உடனே என் மனதில் ஓடியது. அருகே வந்து என் கைகளை பிடித்துக்கொண்ட அஜித் சாரும் அதை உணர்ந்துகொண்டார். என்னை பற்றி அன்புடன் விசாரித்தார். இத்தனை வருடங்களில் அவர் கொஞ்சம் கூட மாறவில்லை. அவர் தற்போது நடித்துவரும் வலிமை படம் மிகப்பெரிய வெற்றிபெற வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.
சீனியர் நடிகை வாணி விஸ்வநாத்தின் கணவரான பாபுராஜ், சில வருடங்களுக்கு முன் விக்ரமின் ஸ்கெட்ச் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.