வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
ஹிந்தித் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அனன்யா பான்டே. 'ஸ்டூடன்ட் ஆப் த இயர் 2' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதற்கடுத்து 'பதி பத்னி அவுர் ஓ, காலி பீலி' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது தெலுங்கு, ஹிந்தியில் உருவாகி வரும் 'லிகர்' படம் மூலம் தென்னிந்தியத் திரையுலகிலும் அறிமுகமாக உள்ளார். சில நாட்களுக்கு முன்பு போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மும்பையில் அனன்யா வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அதனால், செய்திகளில் பரபரப்பாக இடம் பெற்றார்.
இதனிடையே, வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள புதிய படத்தில் அனன்யாவை கதாநாயகியாக நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார்கக்ளாம். ஆனால், போதைப் பொருள் சோதனையை அடுத்து அந்த எண்ணத்தை கைவிட்டதாக செய்திகள் வெளியாகின.
இது குறித்து அனன்யா பான்டே சமீபத்தி பேட்டி ஒன்றில், “என்னை முதலில் அந்தப் படத்திற்காக யாரும் தொடர்பு கொள்ளவே இல்லை. அப்புறம் என்னை எப்படி அந்தப் படத்திலிருந்து நீக்க முடியும்,” என கேள்வி எழுப்பியுள்ளார்.